News & Events >> St. Alphonsa College - College Day
கல்விப்பணியில் தன்பணியைத் திறம்படச் செய்துவரும் தக்கலை மறைமாவட்ட சீரோமலபார் கத்தோலிக்கத் திருச்சபையினரால் தொடங்கப்பட்ட கருங்கல் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா 2017 மார்ச் 18 ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. தக்கலை சீரோமலபார் கத்தோலிக்க மறைமாவட்ட மேதகு ஆயர் மார் ஜார்ஜ் இராஜேந்திரன் அவர்கள் கல்லூரி ஆண்டு மலர் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் டாக்டர் ஜான் டி பிரிட்டோ அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்து, “தன் துன்பம் பொருட்படுத்தாது பிறர்க்கு உதவி செய்து வாழ்தல் வேண்டும்” போன்ற அரிய பல கருத்துக்களை மாணவர் மனதில் பதியும் படிச் சிறப்புரையாற்றி, பல்கலைக்கழகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கல்லூரி முதல்வர் அருட்தந்தை டாக்டர் ஜான் போஸ்கோ அவர்கள் கல்லூரி ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார். கல்லூரி மேலாளர் அருட்தந்தை ஜோஸ் முட்டத்துப்பாடம், அருட்தந்தை தாமஸ் பவ்வத்துப்பறம்பில் மற்றும கல்லூரி தாளாளர் அருட்தந்தை ஆண்டணி ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கல்லூரி மாணவர் மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தக்கலை மறைமாவட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்கள் மறைமாவட்ட பணியாளர்கள் பலர் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்தனர். வருகைதந்தோர் அனைவரையும் கல்லூரித் துணை முதல்வர் டாக்டர் ஜான் அவர்கள் வரவேற்றுப்பேசினார். தமிழ்த்துறை துணைப்பேராசிரியர் டாக்டர் ஷீமாமோள் நன்றியுரை ஆற்றினார். இறுதியில் தேசியகீதம் இசைக்க விழா இனிதே நிறைவுற்றது

ANNOUNCEMENTS
MASS READINGS
Visitor Counter
Free Web Counter