News & Events >> St. Alphonsa College - National Seminar
புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சூசைபுரம், கருங்கல் - தேசிய கருத்தரங்கம்

புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.02.2017 வெள்ளிக்கிழமையன்று வணிகவியல் துறை சார்பாகத் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி நிறுவனரும் தக்கலை சீரோ மலபார கத்தோலிக்கத் மறைமாவட்ட ஆயருமான மார் ஜார்ஜ் இராஜேந்திரன் SDB அவர்கள் தலைமையுரை வழங்கினார். கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் ஜாண் போஸ்கோ அவர்கள் துவக்கவுரையாற்றினார். அருட்தந்தை டென்சி வர்கீஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.  கல்லூரித் தாளாளர் அருட்தந்தை ஆண்டனி ஜோஸ் அவர்கள் வாழ்த்திப் பேசினார். பாளையங்கோட்ட்டை புனித சவேரியார் கலைக்கல்லூரி வணிகவியல் துறை தலைவரும் மாணவர் குழுத்தலைவருமான முனைவர் C. யூஜின் பிராங்கோ அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Seminar on Perspectives for Modern Marketers என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கர்நாடகா, கேரளா, செனனை, கோவை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பல்வேறு பல்கலைக் கழகங்களிலிருந்து வருகை தந்த ஆய்வு மாணவர்களும் பேராசிரியர்களஉம் ஆய்வுக் கட்டுரை வழங்கி கருத்துரை வழங்கினர். விழாவில் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளின் தொகுப்பு "International Journal of  Management & Business Studies" என்னும் இதழின் சிறப்புப் நூலாக வெளியிடப்பட்டது. பிற ஆராய்ச்சி கட்டுரைகளி்ன் தொகுப்பு "இன்றைய வணிகத்தின் வாயப்புகளும் சவால்களும்" என்னும் தலைப்பில் நூலாக வெளியடப்பட்டது. மேலும் Souvenier ஒன்றும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் " ஆல்காம் டேலன்றேர்ஸ்" என்னும் சிறப்பு இதழும் வெளியிடப்பட்டன. விழா முடிவில் துறைத்தலைவர் முனைவர் சிவநேசன் அவர்கள் நன்றி கூறினார். நிகழ்ச்சியை பேராசிரியர் மதன் குமார் அவர்கள் ஒருங்கிணைத்தார்.

ANNOUNCEMENTS
MASS READINGS
Monday November 20,2017
Season of Dedication of the Church
Visitor Counter
Free Web Counter