News & Events >> Prayer for Fr. Tom Uzhunnalil in Tamil
மார்ச் 04, 2016 அன்று ஏமனில் வைத்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட, சலேசிய சபையைச் சேர்ந்த அருட்தந்தை டோம் உழுந்நாலில் அவர்களுக்காக டிசம்பர், 2016 ஞாயிறு அன்று, திருப்பலியில் ஆர்ப்பரிப்பு மன்றாட்டினிடையே செபிக்க, சீரோ மலபார் ஆயர் பேரவையால் செபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தமிழாக்கம் இதோ:

"என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள்" (யோவா 15:20) என மொழிந்த ஆண்டவரே, உமது நற்செய்தி பணிக்காக வாழ்வை அர்ப்பணித்திருக்கின்ற எல்லா மறைத்தொண்டு பணியாளர்களுக்காகவும் குறிப்பாக துன்ப துயரங்களில் வாழ்கின்றவர்களுக்கும் நீர் என்றும் துணையும் அடைக்கலமும் ஆவீராக.

உமது திருப்பெயருக்காக தீவிரவாதிகளின் சிறையில் அவதியுறும் அருட்தந்தை டோம் உழுந்நாலில் அவர்களை இத்திருப்பலியில் நினைவு கூர்ந்து அவரின் விடுதலைக்காக நாங்கள் உம்மிடம் மன்றாடுகிறோம்."

ANNOUNCEMENTS
MASS READINGS
Visitor Counter
Free Web Counter